கோடைக்காலத்தில் ஏன் மோர் குடிக்க வேண்டும்?

கோடைக்காலம் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் காலம் என்பதால் உடலின் நீர்ச்சத்துகளை உறிஞ்சி விடுவதுடன், உடல்சூட்டையும் அதிகரிக்கிறது. இந்த சமயத்தில் மோர் குடிப்பது பல்வேறு பலன்களை நமக்கு தருகிறது.

Various Source

மோரில் உள்ள லாக்டிக் அமிலமானது உணவு அஜீரணத்தால் ஏற்படும் நெஞ்சு எரிச்சலை குணப்படுத்துகிறது.

கோடைக்கால வெயிலால் உடலில் ஏற்படும் அதிகமான வெப்பத்தை நீக்கி குளிர்ச்சியை அளிக்கிறது.

தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் ரத்த அழுத்தம் குறையும்.

தினமும் மோர் குடித்து வந்தால் கோடைக்காலத்தில் முகத்தில் ஏற்படும் பருக்களை மறைய செய்யும்.

Various Source

கோடை வெயிலால் வியர்வை காரணமாக உடல் சக்தியை இழக்கும் சமயம் மோர் அருந்துவது சக்தியை மீட்டு தருகிறது.

Various Source

மோரில் உள்ள எலக்ட்ரோலைட் மற்றும் நீர்ச்சத்து உடல் வறட்சியடைவதிலிருந்து காக்கிறது.

Various Source

தினமும் தண்ணீர் அதிகம் குடித்து பழகாதவர்கள், அவ்வபோது ஒரு டம்ளர் மோர் குடிப்பது உடலுக்கு நல்லது.