தரமான பேய் படம்? எப்படி இருக்கு ‘கனெக்ட்’?

நயன்தாரா நடித்து அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள ‘கனெக்ட்’ படத்தின் ஷார்ட் விமர்சனம்!

Rowdy Pictures

சூசன் (நயன்தாரா) தனது மகள் அன்னா, கணவர் ஜோசப் மற்றும் தந்தை சத்யராஜூடன் வாழ்ந்து வருகிறார்.

கொரோனா வைரஸ் ஊருக்குள் பரவ தொடங்கிய சமயம் மருத்துவரான ஜோசப் மருத்துவமனையில் தங்கி சிகிச்சையளித்து, தானும் கொரோனாவால் இறக்கிறார்.

சூசனுக்கும், அன்னாவுக்கு கொரோனா பாதிப்பு வரவே அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்படுகிறது.

இறந்த தனது அப்பாவிடம் பேச விரும்பும் அன்னா ஆன்லைன் மூலம் மந்திரவாதியை நாடுகிறாள். ஆனால் மந்திரவாதி துஷ்ட பேய் ஒன்றை அன்னா மேல் ஏவி விடுகிறான்.

துஷ்டப்பேயிடம் இருந்து தனது மகளை சூசன் மீட்டாரா? மந்திரவாதி ஏன் அப்படி செய்தான்? இறுதியில் என்ன ஆனது? என்பது திகில் கிளப்பும் முழு திரைப்படம்

Rowdy Pictures

மாயா திரைப்படத்தை போலவே இதிலும் திகில் காட்சிகளில் த்ரில்லிங்கை கிளப்பியுள்ளார் அஸ்வின். நயன்தாரா மற்றும் சக நடிகர்களின் நடிப்பு சிறப்பு.

Rowdy Pictures

சில கதாப்பாத்திரங்களையும், மூடப்பட்ட ஒரு வீட்டையும் மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு சரியான த்ரில்லர் அனுபவத்தை திரைக்கதையில் கொடுத்துள்ளார் இயக்குனர்.