வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2023 (14:36 IST)

நானியின் தசரா படத்தின் முதல் நாள் வசூல் இத்தனைக் கோடியா?

நானி நடிப்பில் ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’திரைப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக கடந்த மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இந்த படம் நல்ல வசூலை செய்து வருகிறது. முதல் நாளில் மட்டும் உலகம் முழுக்க சுமார் 38 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.