செவ்வாய், 3 அக்டோபர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 ஜூன் 2023 (15:00 IST)

தாயைக் குளிர்விப்பதை விட பெருங்கடமை எதுவும் நமக்கு இல்லை: டாக்டர் ராமதாஸ்..!

ramadoss
தாயைக் குளிர்விப்பதை விட பெருங்கடமை எதுவும் நமக்கு இல்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
 
மரம் வளர்ப்போம்... மரம் வளர்ப்போம்.... மரம் வளர்ப்போம்... சுற்றுச்சூழலைக் காக்கும் மாபெரும் அறம் செய்வோம்! 
 
நம்மைத் தாங்கும் பூமித்தாயின் உடல் நாளுக்கு நாள் வெப்பமடைந்துக் கொண்டிருக்கிறது. தாயைக் குளிர்விப்பதை விட பெருங்கடமை எதுவும் நமக்கு இல்லை. மரம் வளர்ப்பதன் மூலமாக மட்டுமே பூமித்தாயையும், சுற்றுச்சூழலையும் காக்க முடியும். 
 
அது தான் இன்றைய நிலையில் மாபெரும் அறம் ஆகும். அந்த அறத்தைச் செய்து அன்னைபூமியைக் காக்க உலகச்  சுற்றுச்சூழல் நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்!
 
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டாக்டர் ராமதாஸ் இந்த பதிவை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran