செவ்வாய், 27 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (13:53 IST)

ஆருத்ரா இயக்குநர் துபாயில் கைது.. தமிழக காவல்துறையின் கோரிக்கை ஏற்பு..!

ஆருத்ரா மோசடி வழக்கில் துபாயில் பதுங்கி இருக்கும் நிறுவன இயக்குனரை பிடிக்க, துபாய் நாட்டுடன் தமிழக காவல்துறை பரஸ்பர ஒப்பந்தம் செய்து இருந்த நிலையில் தமிழக காவல்துறையின் கோரிக்கையை ஏற்று ஆருத்ரா இயக்குநர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றவாளிகளை கைது செய்ய பயன்படுத்தும், சிறப்பு பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை தமிழ்நாடு காவல்துறை பயன்படுத்திய நிலையில் துபாய் போலீசார் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்,
 
இதனையடுத்து ஆருத்ரா  மோசடி வழக்கில் முதல் குற்றவாளியாளியான ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டார். தமிழக பொருளாதாரப் பிரிவு போலீசாரின் கோரிக்கையை ஏற்று துபாய் போலீசார் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே தலைமரைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டது அடுத்து விரைவில் அவர் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
 
ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் மூலம், முதலீட்டாளர்களிடம் ரூ.2,500 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஆருத்ரா நிறுவன நிர்வாக இயக்குநர்களான ராஜசேகர் அவரது மனைவி உஷா, தலைமறைவாகி துபாயில் வசித்து வந்ததாக கூறப்பட்டது,
 
மேலும்ன் மோசடி பணத்தை, துபாயில் சுமார் ரூ.300 கோடி வரை ஆருத்ரா ராஜசேகர் முதலீடு செய்திருப்பதாக அதிகாரிகள் தகவல் வெளியானது
 
 
 
Edited by Mahendran