செவ்வாய், 3 அக்டோபர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2023 (11:54 IST)

எம்.பி. பதவி இழப்புக்குப் பின் ராகுல் காந்தி பங்கேற்கும் முதல் கூட்டம்: எங்கே தெரியுமா?

rahul gandhi
சமீபத்தில் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் கர்நாடக மாநிலத்தில் முதல்முறையாக மாபெரும் கூட்டம் ஒன்றில் பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கர்நாடகாவில் ஜெய்பாரத் என்ற பேரணியை ராகுல் காந்தி தொடங்கி வைக்கிறார்.
 
வரும் ஒன்பதாம் தேதி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் ராகுல் காந்தி இந்த பேரணியை தொடக்கி வைக்க இருப்பதாகவும் தொடர்ந்து ஏப்ரல் 11ஆம் தேதி ராகுல் காந்தி வயல் நாட்டில் பிரச்சாரம் செய்ய வைப்பதாகவும் கூறப்படுகிறது.
 
மக்களின் குரலை ஒருபோதும் மெளனம அடையச் செய்ய முடியாது என்றும் மக்களின் குரல் இன்னும் சத்தமாக வலிமையாக ஒலிக்கும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்ட பின்னர் ராகுல் காந்தி கலந்து கொள்ள முதல் பேரணி என்பதால் இந்த பேரணி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்று ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
 
edited by Mahendran