தின பலன்கள்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை, சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, பொருளாதார உயர்வு, கடன்கள் குறைய கூடிய அமைப்பு உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும்...Read More
இன்று பொருளாதார நிலை மிக சிறப்பாக அமையும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபமும் அபிவிருத்தியும் பெருகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9
இன்று பிரிந்து சென்ற உறவினர்களும் தேடிவந்து நட்பு கரம் நீட்டுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்:...Read More
இன்று கை, கால் மூட்டுகளில் வலி, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தம்பதிகளிடையே உண்டாகக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தின் ஒற்றுமை குறையும்....Read More
இன்று தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். நண்பர்கள் உறவினர்களிடையேயும் பகைமை உண்டாகும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் தவிர்த்து விடுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு,...Read More
இன்று பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும். ஆடம்பர செலவுகள் கூடவே கூடாது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட...Read More
இன்று புதிய வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருப்தியான மண வாழ்க்கையும் அமையும். சந்தாண...Read More
இன்று என்ன தான் பாடுபட்டாலும் திறமைகளை வெளிபடுத்த முடியாதபடி தடைகள் ஏற்படும். உங்களின் உழைப்பிற்கான பாராட்டுதல்களை பிறர் தட்டிச் செல்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5
இன்று எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். தேவையற்ற இட மாற்றங்களால் அலைச்சல்களும் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5
இன்று மேலதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. அடிக்கடி உடலில் பாதிப்புகள் உண்டாவதால் விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர்...Read More
இன்று வரவேண்டிய நிலுவைத் தொகைகளும் இழுபறியிலிருக்கும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட...Read More
இன்று எதிர்பார்க்கும் வங்கி கடனுதவிகள் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட முடியாது. வரும் வாய்ப்புகளையும் பிறர் தட்டிச் செல்வார்கள். நிறைய போட்டிகளை சமாளிக்க...Read More

மதுரை மாநகராட்சி பட்ஜெட் - கருப்பு உடையுடன் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் | மதுரை மாநகராட்சியின் 2023-24ம் நிதியாண்டுக்கான அறிக்கை தாக்கல் செய்யும் கூட்டம் மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மேயர் இந்திராணி தாக்கல் செய்தார். இந்த மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்திற்கு திமுக அதிமுக கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஏழு பேர், ராகுல் காந்தியின் தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர். ₹56.21 லட்சம் வருவாய் பற்றாக்குறை என பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வரி வருவாய், மானியம், கடன் மூலம் ₹1751.25 கோடி வருவாய் கிடைக்கும் எனவும் நிர்வாக செலவீனம், பராமரிப்பு, கடனை திரும்ப செலுத்துதல் என ₹1751.82 கோடி செலவீனம் எனவும் மதுரை மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தின் போதும் நிதி பற்றாக்குறை மாமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்குவதில் குறைபாடு என மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் தெரிந்தாலும் இந்த முறை பட்ஜெட் அச்சிடப்பட்ட புத்தகமே தட்டுப்பாடு என்ற நிலை ஏற்பட்டது. இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தின் மீதான விவாதம், அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தின் போது தான் தெரியும் மாமன்ற உறுப்பினர்களின் எதிர்பார்ப்பும் எதிர்ப்பும் விவாதமும்.

ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் நடந்தது என்பது தெரியவில்லை | மதுரை சினிப்ரியா திரையரங்கில் ரசிகர்களோடு விடுதலை -1 திரைப்படத்தை பார்ப்பதற்காக திரைப்படத்தின் கதாநாயகன் சூரி நேரில் வந்து ரசிகர்களோடு அமர்ந்து திரைப்படத்தை கண்டு ரசித்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது : விடுதலை திரைப்படம் தாமதமானதற்கு பொதுமக்கள் காரணம் கேட்டனர் ஆனால் இவ்வளவு தாமதத்திற்கு பின்னும் நல்ல திரைப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை தயாரிப்பாளர்களும் ரசிகர்களும் வெகுவாக கொண்டாடிவருகிறார்கள் எனது குலசாமி சங்கையாவை கும்பிட்டு விட்டு திரைப்படம் பார்க்க வந்திருக்கிறேன் நல்ல திரைப்படத்தை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது எந்த திரைபடத்தையும் வெற்றி படமாக கொண்டு செல்வது ரசிகர்கள் தான் நான் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படத்தை எனது ரசிகர்கள் வெற்றியுடன் கொண்டாடிவருகின்றனர். தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதை விட வேறு என்ன பெருமை இருக்கிறது இந்த படத்திற்கோ இந்த படத்தில் யாருக்கு தேசிய விருது கிடைத்தாலும் அது எனக்கு கிடைத்த போன்ற மகிழ்ச்சியை தரும் தேசிய விருது பெற்ற வெற்றிமாறனின் படத்தில் நடித்ததை விட எனக்கு வேறு என்ன வேண்டும் , மிகப்பெரிய நடிகர் விஜய் சேதுபதியோடு நடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி இந்தத் திரைப்படத்திற்காக ஒவ்வொரு கலைஞர்களும் மிகவும் கஷ்டபட்டிருக்கிறார்கள் ரோகினி திரையரங்கில் நடைபெற்ற அனுமதி மறுப்பு சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சூரி எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்றுதான் என்பதை தெரியப்படுத்த தான் திரையரங்கு வந்தது, நீ நான் என்ற வேறுபாடு திரையரங்கிற்கு கிடையாது,, இந்த சம்பவத்திற்கு நான் வருத்தப்படுகிறேன்,்எந்த சூழலில் இது நடந்தது என்று தெரியவில்லை, திரையரங்கில் அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்றார்.

கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் என மதுரையில் அர்ஜுன் சம்பத் பேட்டி | கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் என மதுரையில் அர்ஜுன் சம்பத் பேட்டி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் 13 கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தார், பின்னர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில் "சுதந்திர போராட்ட தியாகி வீரசாவர்க்கரை இழிவாக பேசிய ராகுல்காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், சித்திரை திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், இந்துக்களை தொடர்ந்து அவதூறவாக பேசி வரும் திருமாவளவன் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் திமுகவை சேர்ந்தவர் மட்டுமே அறங்காவலர் பதவியில் நியமிக்கப்பட்டு வருகிறார், ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்களை அறங்காவலராக நியமிக்க வேண்டும், எப்ரல் 14 ல் பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஊழல் பட்டியல் வெளியிடுகிறார், அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலில் இடம்பெறும் திமுக அமைச்சர்களை கைது செய்ய வேண்டும், தமிழகத்தில் லஞ்சம், ஊழலை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெற தென் தமிழகத்தை தனி மாநிலமாக உருவாக்க வேண்டும், கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும், இதற்கு மத்திய, மாநில அரசு வலியுறுத்த உள்ளேன், கச்சத்தீவு முழுக்க முழுக்க கிறிஸ்தவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறது" என கூறினார்

ராகுல்காந்திக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் கைது | மதுரையில் ராகுல்காந்திக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆதித்தமிழர் கட்சியினர் 50 க்கும் மேற்பட்டவர்கள் கைது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியினை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டதை கண்டித்தும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன் தலைமையில் அக்கட்சியினர் 50 க்கும் மேற்பட்டவர்கள் மதுரையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர், பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்த போராட்டக்காரர்கள் ரயில் நிலைய கிழக்கு நுழைவு வாயில் போராட்டம் நடத்தினர்கள், மேலும் தடுப்புகளை தாண்டி ரயில் நிலையத்திற்கு உள்ளே போராட்டக்காரர்கள் செல்ல முயன்றதால் காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளு - முள்ளு ஏற்பட்டது, இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

மாணவர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் மனு | கோவை - 29-03-23 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்டு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள நாச்சியார் வித்யாலயம் பள்ளியில் சுமார் 80 குழந்தைகள் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவசமாக படித்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு இதுவரை எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி கட்டணமாக ரூ.10,500 முதல் ரூ.15,500 வரை கட்டி வந்த நிலையில் அதற்கு எந்தவிதமான ரசீதும் இதுவரை கொடுக்கவில்லை என்றும் தற்போது 2023-24 ஆம் ஆண்டிற்கான கல்வி கட்டணமாக ரூ.25 ஆயிரம் வரை பள்ளி நிர்வாகம் நிர்ணயித்து தொகையை கட்ட நிர்பந்தம் செய்வதாக கூறி பெற்றோர்கள் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து மனுதாரர்கள் கூறியதாவது. சீருடை , புத்தகம், பிற கூடுதல் பயிற்சிக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்து வந்த நிலையில், தற்போது சிபிஎஸ்சி யாக பள்ளி தரம் உயர்த்தப்படுவதால் இக்கட்டணத்தை செலுத்த பள்ளி நிர்வாகம் கட்டாயபடுத்துவதாகவும் உடனடியாக கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், அரசு அறிவித்த கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் இலவச கல்வி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை மக்களின் பசியை போக்கும் விதமாக ஜீவ சாந்தி அறக்கட்டளை சார்பாக துவங்கப்பட்டுள்ள அணையா அடுப்பு | கோவை ஆதரவற்ற ஏழை மக்களின் பசியை போக்கும் விதமாக ஜீவ சாந்தி அறக்கட்டளை சார்பாக துவங்கப்பட்டுள்ள அணையா அடுப்பு எனும் சமுதாய சமையற்கூடத்தில்,ரமலான் மாத காலை உணவான ஸஹர் உணவை விநியோகிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் ஆதரவில்லாமல் உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்வது,இலவச ஆம்புலன்ஸ் சேவை,என பல்வேறு சமூக சேவை பணிகளை கடந்த பதினைந்து வருடங்களாக செய்து வருகின்றனர். கடந்த வாரம் அணையா அடுப்பு எனும் சமுதாய சமையற்கூடத்தை துவக்கி அதன் வாயிலாக கோவை அரசு மருத்துவமனை,இரயில் நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதியில் இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம் ஜான் நோன்பு துவங்கியதை தொடர்ந்து இன்னும் கூடுதலாக, இஸ்லாமியர்கள் நோன்பு வைப்பதற்கு முன்னதாக உட்கொள்ளும் ஸஹர் உணவான காலை உணவை வழங்கும் பணியை துவங்கி உள்ளனர். இந்நிலையில் இதற்கான பணிகளை நேரில் பார்வையிட்ட தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி ஜீவசாந்தி அறக்கட்டளையின் நிறுவனர் சலீம் மற்றும் நிர்வாகிகளை பாராட்டினார்.தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வெளி மாநிலம்,மற்றும் வெளியூர்களில் இருந்து கோவையில் இஸ்லாமியர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வசித்து வருவதாகவும்,இதில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பை கருத்தில் கொண்டு அணையா அடுப்பின் வாயிலாக ஸஹர் உணவை அவர்களது இருப்பிடத்திற்கே சென்று வழங்குவது உள்ளபடியே பாராட்டுக்குரியது என புகழாரம் சூட்டினார். கரும்புகடை சேரன் நகர் பகுதியில்,ஆதரவற்ற ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் விதமாக ஜீவசாந்தி அறக்கட்டளையினர் அணையா அடுப்பு துவங்கியுள்ள நிலையில்,அதே பகுதியில் புற்றுநோய் நல மையத்திற்கான பணிகளும் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.

நீட் தேர்வு மாணவர்களின் விவரங்கள் கசியப்பட்டுள்ளது - அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு. | கோவை - 29-03-23 நீட் தேர்வு மாணவர்களின் விவரங்கள் கசியப்பட்டுள்ளது - சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு. மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்விற்கு பல்வேறு மாணவர்கள் மத்திய அரசின் இணையதள பக்கத்தில் அவர்களது விவரங்களை பதிவேற்றம் செய்துள்ள நிலையில் அந்த தகவல்கள் கசியப்பட்டு சில தனியார் பயிற்சி நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக பெறப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு தனியார் இடைக்கால பயிற்சி நிறுவனங்களும் பெற்றோர்களை வணிகமயமாக்கும் எண்ணத்தோடு கட்டாயப்படுத்துவதாகவும் எனவே மத்திய அரசின் நீட் தேர்வு வலைதளபக்கத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்களை சட்டத்திற்கு புறம்பாக கசிய செய்த அதிகாரிகள் மீதும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மயூரா ஜெயக்குமார் கூறியதாவது. மத்திய அரசினுடைய நீட் தேர்வு துறை இந்த ஆண்டு மிகப்பெரிய சைபர் ஊழலில் ஈடுபட்டுள்ளார்கள் என தெரிவித்தார். சமீப காலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்திய அரசின் வலைத்தளத்தில் அவர்களுடைய தகவலை பதிவேற்றிய நிலையில் அந்த தனிப்பட்ட தகவல்களை நீட் தேர்வு துறை தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு விட்டுள்ளதாகவும் மேலும் இது சட்டப்படி குற்றமாகும் எனவும் கூறினார். தற்போது இந்த தகவல்கள் கசியப்பட்டு தனியார் பயிற்சி நிறுவனங்கள் மாணவர்களின் பெற்றோர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கட்டாயப்படுத்தி அவர்களை மூளைச்சலவை செய்து தங்களுடைய நிறுவனங்களில் குழந்தைகளை படிக்க வைத்தால் தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என கூறி பணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். எனவே மத்திய அரசின் நீட் தேர்வு துறை அதிகாரிகள் மீதும் தனியார் பயிற்சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். | கோவை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளில் மையிட்டு அழிப்போம் என்ற நிலைபாட்டை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். மே 5 ஆம் தேதி வணிகர் தின மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெறுகிறது. இது குறித்த கோவை மண்டல சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கோவை சாய்பாபா காலனி உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது.வணிகர் உரிமை மாநாட்டில் லட்சக்கணக்கான வணிகர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். அனைத்து மாநில தலைவர்கள், மாநில அமைச்சர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் 5 ஆண்டு என்பதை ஓராண்டாக உணவு தர நிர்ணயம் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும், ஜி.எஸ்.டி.யை எளிமையாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படும் என்றும் ஏப்ரல் 18"ஆம் தேதி டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் அவர்‌ குறிப்பிட்டார்.மேலும் எம்.ஆர்.பி., கொண்டு வணிகர்களை வஞ்சிக்கும் கார்ப்பிரேட்டிற்கு அரசு துணை போவதாக தோன்றுகிறது எனவும் குற்றம்சாட்டினார். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும், ஆன்லைன் வர்த்தகத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என்றும் விக்கிரமராஜா கூறினார். மேலும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளில் மையிட்டு அழிப்போம் என்ற நிலைபாட்டை தவிர்க்க வேண்டும் எனவும்‌, இவ்விவகாரத்திற்கு ஒரு மாத அவகாசம் என்பது போதாது என கூறிய அவர்‌, எங்கள் அமைப்பு சார்பில் அனைத்து வணிகர்களுக்கு தமிழ் மொழியில் பெயர் பலகை வைக்கக்கோரி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

4200கிலோ மீட்டர் சைக்கிள் பயணம்-பசுமை இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர். | கோவை காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம்- 4200கிலோ மீட்டர் பசுமை இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர். கோவையை சேர்ந்த இளைஞர் சிவசூரியன் செந்தில்ராமன் இவர் தனது சிறுவயதில் இருந்து சைக்கிள் பயணம் மீது சமூகத்தின் மீது மிகவும் அக்கறை கொண்டவர். அதே போல சைக்கிளில் பயணம் செய்து மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் பசுமை இந்தியா மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்து பள்ளி கல்லூரி மானவர்களைடையே பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனிமனித சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.கடந்த 3ஆம் தேதி காஸ்மீரில் துவக்கிய இந்த விழிப்புணர்வு பயணத்தை கன்னியாகுமரி வரை சென்று முடிவு செய்கிறார். இந்நிலையில் கோவை வந்த அவருக்கு கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என 4200 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு சாதனையை நிகழ்த்தும் சிவசூரியனுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

வெப் ஸ்டோரி

மேலும் காண்க

Cricket Update

Live

PBKS

143/4 (15.0)
Sam Curran : 0|Sikandar Raza : 6

KKR

2nd Inns:
Bowler : Varun Chakravarthy

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?